/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமச்சார் அம்மனுக்கு சதுர்தசி நோன்பு வழிபாடு
/
அமச்சார் அம்மனுக்கு சதுர்தசி நோன்பு வழிபாடு
ADDED : அக் 20, 2025 09:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு நடந்தது.
தீபாவளி பண்டிகை தினத்தில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியில் இருந்து நேற்று மாலை 4:15 மணி வரை சதுர்தசி நோன்பு எடுக்கும் நேரம் ஆகும்.
இதையொட்டி, பெண்கள் தங்களின் குடும்பத் தோடு, விழுப்புரம் மந்தக் கரை பகுதியில் உள்ள ஸ்ரீ மழுக்கரமேந்திய அமச்சார் அம்மன் கோவிலில் நேற்று காலை 11:00 மணிக்கு வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டநோன்பு சட்டிகளை சுவாமி முன் வைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து, மாலை 4:15 மணி முதல் இன்று 21ம் தேதி மாலை 5:30 மணி வரை அமாவாசை நோன்பு எடுக்கும் நிகழ்வு நடந்தது.

