/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மருத்துவ கல்லுாரியில் கலெக்டர் ஆய்வு
/
மருத்துவ கல்லுாரியில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 11, 2025 07:09 AM

விக்கிரவாண்டி; விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இடையீட்டு சேவை மையம் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவை கலெக்டர் ஆய்வு செய்தார்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி நடந்த நுாலகம் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த கலெக்டர் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் மருத்துவமனையில் உள்ள இடையீட்டு சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, மையத்தில் 18 வயது வரை உள்ள வளர்ச்சி குறைபாடு, ஆட்டிசம் குறைபாடு உடைய நபர்களுக்கு அளிக்கும் சிகிச்சைகள், தினமும் வருவோர் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து, பச்சிளம் குழந்தைகள் பிரிவை ஆய்வு செய்து சிகிச்சை விபரங்களை கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன், கல்லுாரி டீன் கீதாஞ்சலி, கல்லுாரி டீன் கீதாஞ்சலி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் கணேஷ்குமார், ஏ.ஆர்.எம்.ஓ., வெங்கேடசன், டாக்டர்கள் திலகவதி, வினோத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.