/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார் கோவில் மாசி பெருவிழா முன்னேற்பாடு பணி குறித்து கலெக்டர் ஆலோசனை
/
மேல்மலையனுார் கோவில் மாசி பெருவிழா முன்னேற்பாடு பணி குறித்து கலெக்டர் ஆலோசனை
மேல்மலையனுார் கோவில் மாசி பெருவிழா முன்னேற்பாடு பணி குறித்து கலெக்டர் ஆலோசனை
மேல்மலையனுார் கோவில் மாசி பெருவிழா முன்னேற்பாடு பணி குறித்து கலெக்டர் ஆலோசனை
ADDED : பிப் 29, 2024 11:44 PM

விழுப்புரம்: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழாவை யொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் வளாகத்தில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் பழனி தலைமை தாங்கி, கூறியதாவது,
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் வரும் மார்ச் 8ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாசி பெருவிழா நடக்கிறது. இதில், மகா சிவாரத்திரி, மயான கொள்ளை, தீமிதி, திருத்தேர், சத்தாபரணம், தெப்பல் உற்சவம் நடக்கவுள்ளதால், பக்தர்கள் லட்ச கணக்கில் வருவர். பக்தர்களின் நலன் கருதி மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து துறை வாரியாக செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றியம் மூலம் தற்காலிய பஸ் நிலையங்கள், வள்ளலார் மடம், ஜெயின் கோவில் இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதல் மின்விளக்கு வசதி ஏற்படுத்துவதோடு, துாய்மை பணி மேற்கொள்ளுதல், தற்காலிக கழிவறை, குப்பை தொட்டி வசதிகளை செய்ய வேண்டும்.
மேல்மலையனுார் கிராமத்திற்கு வரும் கொடுக்கன்குப்பம் சாலை, முருகன்தாங்கல் கூட்ரோடு, வடபாலை சாலை ஆகிய சந்திப்பு சாலைகளில் ஊராட்சி தலைவர்கள் மூலம் பழுதான மின் விளக்குகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து சமய அறநிலைய துறை சார்பில், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க ஆங்காங்கே தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும் என, தெரிவித்தார்.
எஸ்.பி., தீபக்சிவாச், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஸ்வநாதன், இந்துசமய அறநிலைய துறை ஆணையர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

