/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சர்வதேச கூட்டுறவு நாள் மினி மாரத்தான் பங்கேற்க கூட்டுறவு இணை பதிவாளர் அழைப்பு
/
சர்வதேச கூட்டுறவு நாள் மினி மாரத்தான் பங்கேற்க கூட்டுறவு இணை பதிவாளர் அழைப்பு
சர்வதேச கூட்டுறவு நாள் மினி மாரத்தான் பங்கேற்க கூட்டுறவு இணை பதிவாளர் அழைப்பு
சர்வதேச கூட்டுறவு நாள் மினி மாரத்தான் பங்கேற்க கூட்டுறவு இணை பதிவாளர் அழைப்பு
ADDED : ஜூன் 19, 2025 04:20 AM
விழுப்புரம், : சென்னையில் வரும் ஜூலை 6ம் தேதி நடக்கும் சர்வதேச கூட்டுறவு நாள் மினி மாரத்தான் போட்டி பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜயசக்தி செய்திகுறிப்பு;
சர்வதேச கூட்டுறவு ஆண்டு மற்றும் சர்வதேச கூட்டுறவு நாளையொட்டி, தமிழக கூட்டுறவு துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி, சென்னை தீவுத்திடலில் வரும் ஜூலை 6ம் தேதி காலை 5.30 மணிக்கு நடக்கிறது. 5 கி.மீ., மாரத்தான் போட்டி, சென்னை தீவு திடலில் துவங்கி சுவாமி சிவானந்தா சாலை வழியாக மன்றோ சிலை சென்று, மீண்டும் தீவுத்திடலில் முடிவடைகிறது.
இதில், ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் 18 முதல் 40 வயது மற்றும் 40 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் பங்கேற்கலாம். வெற்றி பெறும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக முதல் பரிசு ரூ. 30 ஆயிரம், 2ம் பரிசு ரூ.20 ஆயிரம், 3ம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. பங்கேற்கும் அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ், டிசர்ட், சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
ஒற்றுமை திருவிழாவில் பங்கேற்க விரும்புவோர் https://www.tncu.tn.gov.in/marathon/register இணையதளத்தில் பதிவு செய்து நுழைவு கட்டணமாக ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும். இது சம்பந்தமான கூடுதல் விபரங்களுக்கு 9790954671 மொபைல் எண்ணில் அல்லது tncu08@gmail.com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.