/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டு மனைப்பட்டா கேட்டு விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
/
வீட்டு மனைப்பட்டா கேட்டு விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
வீட்டு மனைப்பட்டா கேட்டு விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
வீட்டு மனைப்பட்டா கேட்டு விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 25, 2024 11:54 PM

விழுப்புரம் : இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கோலியனுார் ஒன்றிய தலைவர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் முருகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பொருளாளர் ஜெயக்குமார், துணைச் செயலாளர் முத்துவேல் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தென்னமாதேவி கிராம மாற்றுத் திறனாளிகளுக்கு காலம் கடத்தாமல் இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர் மணிகண்டன் நன்றி கூறினார்.