நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை மசூதியில் ஷபே-பராத் சிறப்பு சொற்பொழிவு மற்றும் தொழுகை நடந்தது.
அவலுார்பேட்டை மசூதியில் ஷபே-பராத் இரவை முன்னிட்டு இஷா தொழுகை 9:00 மணிக்கு துவங்கியது. ஹசரத் முகமது சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். நபிலான நான்கு ரகாத் சலாத்துல் தஸ்பீ சிறப்பு தொழுகையை தனித்தனியாக தொழுதனர்.
உலக அமைதி மற்றும் பாவமன்னிப்பிற்கான சிறப்பு பிரார்த்தனை துவா நடந்தது. ஜமாத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

