/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்
/
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்
ADDED : செப் 27, 2025 02:21 AM

விழுப்புரம் : விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடந்தது.
வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மத்திய செயற்குழு உறுப்பினர் வேங்கடபதி வரவேற்றார். நிர்வாகிகள் ராஜேந்திரன், வள்ளல் பாரி, புஷ்பகாந்தன் சிறப்புரையாற்றினர். இதில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்ய போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
திண்டிவனம் திண்டிவனம் தாலுகா அலுவலக வளாகத்தில், நடந்த போராட்டத்திற்கு, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். போராட்டத்தில், திரளான வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, தலைமையிடத்து துணை தாசில்தார் சித்தார்தன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர்கள் சவுந்தர்ராஜன், லோகநாதன், மாவட்ட பொருளாளர் கேசவன் முன்னிலை வகித்தனர். தலைமை சர்வேயர் தேவக்குமார் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் தமிழரசன், வி.ஏ.ஓ.,க்கள் மணிபாலன், ராஜா ,மலையப்பன், கிராம உதவியாளர் சங்க மாவட்ட நிர்வாகி ரவி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு மாவட்ட இணை செயலாளர் பிரசாத்குமார் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை சங்க மூத்த நிர்வாகி வேல்முருகன், வி.ஏ.ஓ., சங்க மாவட்ட பொருளாளர் பாரதிராஜா, இணைச்செயலாளர் முருகதாஸ், வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்க மாவட்ட இணை செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

