/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரோவில் யாத்ரா நிறுவனத்தில் பிலிம் அகாடமி துவக்க விழா
/
ஆரோவில் யாத்ரா நிறுவனத்தில் பிலிம் அகாடமி துவக்க விழா
ஆரோவில் யாத்ரா நிறுவனத்தில் பிலிம் அகாடமி துவக்க விழா
ஆரோவில் யாத்ரா நிறுவனத்தில் பிலிம் அகாடமி துவக்க விழா
ADDED : மார் 19, 2025 04:20 AM

வானுார்: ஆரோவில் யாத்ரா கலை பண்பாட்டு நிறுவனம் சார்பில், யாத்ரா பிலிம் அகாடமி துவக்க விழா நடந்தது.
ஆரோவில் யாத்ரா கலை பண்பாட்டு நிறுவனம் சார்பில் திரைப்படத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், திரைப்படத் துறை சார்ந்த நடிப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதற்காக யாத்ரா பிலிம் அகாடமி துவக்க விழா நடந்தது.
நிறுவனர் சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன், திரைப்பட இயக்குனர் சிம்புதேவன் ஆகியோர் பயிற்சி அகாடமியை துவக்கி வைத்தனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க நிர்வாகி ராமச்சந்திரன், புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் ராதிகா கண்ணா, புதுச்சேரி பிலிம் பார்ம் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், பேராசிரியர் கிருத்திகா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியை, யாத்ரா கலை பண்பாட்டு நிறுவன நிர்வாகி பிரியதர்ஷினி தொகுத்து வழங்கினார்.