/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முண்டியம்பாக்கம் அரசு பள்ளியில் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி
/
முண்டியம்பாக்கம் அரசு பள்ளியில் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி
முண்டியம்பாக்கம் அரசு பள்ளியில் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி
முண்டியம்பாக்கம் அரசு பள்ளியில் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி
ADDED : ஜன 28, 2024 09:31 AM

விக்கிரவாண்டி : முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பொன்விழா ஆண்டு விழா நடந்தது.
முன்னாள் பள்ளி மாணவர்கள் சார்பில் நடந்த 50 வது பொன் விழாஆண்டு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சந்திர சேகர் தலைமை தாங்கினார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி கருணாகரன், லட்சுமிநாராயணன், ரேணுகா ராஜவேல் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் வரவேற்றார் .
மாவட்ட கலெக்டர் பழனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி நுழைவு வாயில் மற்றும் பொன் விழா நினைவு வளைவை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பள்ளியில் ஸ்மார்ட் கிளாைஸ துவக்கி வைத்து, முன்னாள் ஆசிரியர்களை கவுரவித்தார்.
பின்னர், முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூபாய் 15லட்சம் செலவில் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்தது குறித்து பாராட்டி பேசினார்.
சி.இ.ஓ., அறிவழகன், டி.இ.ஓ.,க்கள் மகாலட்சுமி, சிவசுப்பிரமணியன், தாசில்தார் யுவராஜ், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், வி.ஏ.ஓ., கோவிந்தன் ஊராட்சி மன்ற துணை தலைவர் தினேஷ் மற்றும் முன்னாள் மாணவர்கள் கோபாலகிருஷ்ணன், ராஜ்குமார் உள்ளிட்ட ப லர் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியர் ஆனந்தி நன்றி கூறினார்.