/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்கூட்டர் மீது பைக் மோதல் பட்டதாரி பெண் பலி
/
ஸ்கூட்டர் மீது பைக் மோதல் பட்டதாரி பெண் பலி
ADDED : மே 26, 2025 12:21 AM

வானுார்: வானுார் அருகே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது பைக் மோதிய விபத்தில், பட்டதாரி பெண் இறந்தார்.
வானுார் அடுத்த விநாயகபுரம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் மகன் நர்மதா, 22; பி.எஸ்சி., பட்டதாரி. புதுச்சேரி மாநிலம், வடமங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 23ம் தேதி வேலைக்கு சென்று விட்டு எலட்ரிக் ஸ்கூட்டரில் வீடு திரும்பினார்.
வானுார் அடுத்த ரங்கநாதபுரம்-சேமங்கலம் சாலையில், விநாயகபுரம் சந்திப்பில் பின்னால் வந்த பைக் மோதியது.
இதில் படுகாயமடைந்த நர்மதா புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார்.
வானுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நர்மதாவின் கண்களை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.