/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நீதிமன்ற வளாகம் அடிக்கல் நாட்டு விழா; ஐகோர்ட் தலைமை நீதிபதி பங்கேற்பு

ADDED : ஜன 25, 2024 11:58 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் 20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி, பூமி பூஜை நடத்தி அடிக்கல் நாட்டினார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா வரவேற்றார்.
நிகழ்ச்சியில், ஐகோர்ட் நீதிபதிகள் சுந்தர், தண்டபாணி, கிருஷ்ணன் ராமசாமி, பாரத சக்ரவர்த்தி, கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக் சுவாச், விக்கிரவாண்டி லாயர்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் விஸ்வநாதன், தலைவர் சங்கரன், செயலாளர் வீரவேல்.
துணைத் தலைவர் சண்முகம், துணைச் செயலாளர் கலை வேந்தன், அரசு வழக்கறிஞர்கள் பொன் கோபு, சுப்ரமணியன், வழக்கறிஞர் சுரேஷ், டி.எஸ்.பி., சுரேஷ், பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், வட்ட வழங்கல் அலுவலர் விமல்ராஜ், வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், சார்லின், வி.ஏ.ஓ., ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.