/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு; வீணாகும் நெற் பயிர்கள்
/
அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு; வீணாகும் நெற் பயிர்கள்
அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு; வீணாகும் நெற் பயிர்கள்
அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு; வீணாகும் நெற் பயிர்கள்
ADDED : ஜன 26, 2024 12:00 AM

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் நெல் அறுவடை இயந்திரம் தட்டுப்பாட்டால் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருவெண்ணெய்நல்லுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் பயிரிட்டுள்ளனர். கடந்த மாதம் பெய்த கன மழையால் 25 ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கி முளைப்பு விடத் துவங்கி பாழாயின.
இந்நிலையில் தப்பிய பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்யத் துவங்கியுள்ளனர். ஆனால், போதிய நெல் அறுவடை இயந்திரம் கிடைக்காததாலும், அவற்றின் வாடகை அதிகளவில் உள்ளதாலும் விவசாயிகள் செய்வதறியாமல், மழையில் தப்பிய பயிர்களைக் கூட அறுவடை செய்ய முடியவில்லையே என புலம்பி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் நேரடியாக விவசாய நலனில் அக்கறை செலுத்தி எளிதில் நெல் அறுவடை இயந்திரம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

