நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : கோலியனுார் அடுத்த பானாம்பட்டு அரசு பள்ளியில் ஆல் தி சில்ரன் அறக்கட்டளை சார்பில், தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். கீழ்பெரும்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய முதுநிலை செவிலியர் ப்ரீத்தி, சுத்தம், சுகாதாரத்தின் அவசியம் குறித்து, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாணவர்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்தி, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதன் அவசியம் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. செவிலியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆல் தி சில்ரன் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

