/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ராமலிங்க சுவாமி மடத்தில் ஜோதி தரிசனம்
/
ராமலிங்க சுவாமி மடத்தில் ஜோதி தரிசனம்
ADDED : ஜன 25, 2024 11:54 PM

விழுப்புரம் : விழுப்புரம் ராமலிங்க சுவாமி மடத்தில் தைப்பூச ஜோதி பெருவிழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை 6:00, 10:00, மதியம் 1:00, இரவு 7:00, 10:00 மணிக்கு ஏழு திரைநீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.
இன்று காலை 9:30 மணிக்கு திருத்தேர் வீதியுலாவும், 10:00 மணிக்கு முதல் அமர்வு சொற்பொழிவும் நடக்கிறது.
மதியம் 2:00 மணிக்கு நாட்டியாலயா நடனப்பள்ளி சார்பில் நாட்டியாஞ்சலியும், மாலை 5:00 மணிக்கு நாட்டியத்தில் பங்கேற்றோருக்கு பரிசளிப்பு விழாவும் நடக்கிறது.
ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சிவாகரன், ஆய்வாளர் லட்சுமி, செயல் அலுவலர் மதனா, எழுத்தர் பிரபாகரன் உட்பட சன்மார்க்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

