ADDED : ஜன 10, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் சங்கர மடத்தில் காஞ்சி மகா பெரியவர் சுவாமிகளின் 30ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது.
ஆராதனை விழா கடந்த 6ம் தேதி துவங்கி நடந்தது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது.
அதனையொட்டி, காலை 6:00 மணிக்கு கோ பூஜை, கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.
கலச ஸ்தாபனம், ருத்ரை காதசி பாராயணம் மற்றும் ஹோமம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு, ஆன்மிகசொற்பொழிவாளர் மணிகண்டனின், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. திரளானபக்தர்கள் பங்கேற்றனர்.
மடத்தின் மேலாளர் ராம மூர்த்தி, மடத்தின் ஆசிரியர் சங்கரநாராயணன் உள்ளிட் டோர் ஒருங்கிணைத்தனர்.

