/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூங்கில்பட்டில் கோவில் கும்பாபிஷேகம்
/
மூங்கில்பட்டில் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 07, 2025 01:44 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த மூங்கில் பட்டு ராமநாதீஸ்வரர் பர்வத வர்த்தினி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
விக்கிரவாண்டி ஒன்றியம் மூங்கில் பட்டில் ராம நாதீஸ்வரர், பர்வத வர்த்தினி கோவில் கிராம கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக சாலைபூஜை துவங்கியது.
நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு 4ம் கால பூஜை நிறைவு பெற்று திருக்குடங்கள் புறப்பட்டு காலை 10.00 மணிக்கு கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
திருக்கழுக்குன்றம் தாமோதரன், பேரணாம்பட்டு திருவாரூர் நடராஜன் சாமிகள் முன்னின்று யாகசாலை பூஜைகளை செய்திருந்தனர்.
மூங்கில்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.