/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லோக்சபா தேர்தல் குழு நாளை வருகை தி.மு.க., மாவட்ட செயலாளர் அழைப்பு
/
லோக்சபா தேர்தல் குழு நாளை வருகை தி.மு.க., மாவட்ட செயலாளர் அழைப்பு
லோக்சபா தேர்தல் குழு நாளை வருகை தி.மு.க., மாவட்ட செயலாளர் அழைப்பு
லோக்சபா தேர்தல் குழு நாளை வருகை தி.மு.க., மாவட்ட செயலாளர் அழைப்பு
ADDED : பிப் 29, 2024 11:47 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நாளை லோக்சபா தேர்தல் குழு வரவுள்ளதால் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை எழுத்து மூலம் வழங்கலாம் என, தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை :
லோக்சபா தேர்தலையொட்டி, தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர்கள் இளங்கோவன் எம்.பி., மாநில விவசாய அணி செயலாளர் விஜயன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், ராஜா, எம்.எல்.ஏ.,க்கள் செழியன், எழிலரசன், எழிலன், எம்.பி.,க்கள் ராஜேஷ்குமார், அப்துல்லா, மேயர் பிரியா ஆகியோர் உள்ளனர்.
இக்குழுவினர் தமிழகத்தில் முக்கிய இடங்களில் பயணித்து பொதுமக்கள், சங்க நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி செய்து வருகின்றனர்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (2ம் தேதி) காலை 10.00 மணிக்கு துணை பொது செயலாளர் பொன்முடி முன்னிலையில், விழுப்புரம் தெற்கு, வடக்கு, கடலுார் கிழக்கு, மேற்கு, அரியலுார், பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களை சந்தித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கவுள்ளனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகேவுள்ள வி.வி.ஏ., மீனாட்சி ஆறுமுகம் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், இம்மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், மீனவர், வணிகர், சிறு, குறு தொழில் முனைவோர், மகளிர் சுயஉதவிக்குழு உட்பட பல்வேறு சங்கங்கள், அரசு ஊழியர் பிரதிநிதிகள், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை எழுத்து மூலம் வழங்கலாம்.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.

