/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தர்மசாஸ்தா ஐயப்பன் மகரஜோதி தரிசனம்
/
தர்மசாஸ்தா ஐயப்பன் மகரஜோதி தரிசனம்
ADDED : ஜன 17, 2024 07:38 AM

விழுப்புரம் : விழுப்புரம் ரயிலடியில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி மகரஜோதி தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழுப்புரம் ரயிலடி வரசித்தி விநாயகர் கோவிலில் தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி சன்னதி உள்ளது. இங்கு, கடந்த 24ம் தேதியில் இருந்து மண்டலாபிஷேகம் பூஜைகள் துவங்கி நடந்து வந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி மகரஜோதி தரிசனத்தில் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இரவு 7.00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அப்பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் செய்தனர்.

