/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மெடிக்கலில் திருட்டு: சேல்ஸ்மேன் மீது வழக்கு
/
மெடிக்கலில் திருட்டு: சேல்ஸ்மேன் மீது வழக்கு
ADDED : ஜன 09, 2024 10:44 PM
விழுப்புரம், -விழுப்புரத்தில் மெடிக்கலில் மருந்து பொருட்கள் மற்றும் பணத்தைத் திருடிய சேல்ஸ்மேன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையைச் சேர்ந்தவர் அப்பன் இளங்கோ, 59; இவர், விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள மெடிக்கலில் மனிதவள மேலாளராக பணிபுரிகிறார். இதே கடையில், வேலுார் மாவட்டம், கல்புதுாரைச் சேர்ந்த மரியசெல்வம் மகன் ஐசக்பிரவீன், 25; சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார்.
அப்பன் இளங்கோ கடந்த 7ம் தேதி மெடிக்கலை திறந்து பார்த்தபோது 5,000 ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் மற்றும் 4,517 ரூபாயும் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பன் இளங்கோ, ஐசக் பிரவீன் மருந்து பொருட்கள், பணத்தை திருடியதாக விழுப்புரம் தாலுகா போலீசில் அளித்த புகாரின்பேரில், ஐசக் பிரவீன் மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

