/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அன்னியூர் அரசு கல்லுாரியை இடம்மாற்ற மா.கம்யூ., கோரிக்கை
/
அன்னியூர் அரசு கல்லுாரியை இடம்மாற்ற மா.கம்யூ., கோரிக்கை
அன்னியூர் அரசு கல்லுாரியை இடம்மாற்ற மா.கம்யூ., கோரிக்கை
அன்னியூர் அரசு கல்லுாரியை இடம்மாற்ற மா.கம்யூ., கோரிக்கை
ADDED : ஜூன் 08, 2025 04:09 AM
விழுப்புரம் : அன்னியூர் புதிய அரசு கல்லுாரியை, போக்குவரத்து வசதியுள்ள இடத்தில் அமைக்க வேண்டும் என மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.
மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை;
விக்கிரவாண்டி தாலுகா அன்னியூரில் அரசு கலை கல்லுாரி துவங்கப்படும் என முதல்வர் அறிவித்து, அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில், இந்தாண்டு அரசு கல்லுாரி துவங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
இதனை மா.கம்யூ., வரவேற்கிறது. அதற்காக முதல்வருக்கும், தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கும் நன்றி. ஆனாலும், போக்குவரத்து வசதியில்லாத இடத்தில் அரசு கல்லுாரி கொண்டு வந்து செயல்படுத்துவது ஏற்கதக்கது அல்ல.
போக்குவரத்து வசதியுள்ள கெடார், காணை, விக்கிரவாண்டி, நேமூர் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பகுதியில், இந்த புதிய கல்லூரி இயங்க வேண்டும். அப்போதுதான், மாணவர்கள் கல்லுாரிக்கு எளிதாக செல்ல முடியும்.
விழுப்புரம்-செஞ்சி சாலையில் நேமூர் அருகே மண்டகப்பட்டில் அரசு இடத்தில் கல்லுாரி அமைக்கலாம். அரசும் மாவட்ட நிர்வாகமும், மாணவர்களின் நலன் கருதி, அன்னியூரில் அமையும் அரசு கல்லூரியை, இடம் மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.