/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ஜ., சார்பில் தேசிய கொடி ஊர்வலம்
/
பா.ஜ., சார்பில் தேசிய கொடி ஊர்வலம்
ADDED : மே 24, 2025 12:25 AM

கோட்டக்குப்பம்: சிந்துார் ஆப்ரேஷன் வெற்றியை கொண்டாடும் விதமாக கோட்டக்குப்பத்தில் பா.ஜ., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடந்தது.
பஹல்காமில் பாக்கிஸ் தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு இந்திய ராணுவம் சிந்துார் ஆப்ரேஷன் பெயரில் பாக்., தீவிரவாதிகள் மீது பதிலடி கொடுத்தது.
இதனை கொண்டாடும் விதமாக, கோட்டக்குப்பத்தில் பா.ஜ., சார்பில் தேசிய கொடி ஏந்தி ஊர்வலம் நடந்தது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாண்டியன், அன்பழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராதிகா, வீரா, கோதண்டபாணி, நகர தலைவர் முருகவேல், முன்னாள் மண்டல தலைவர்கள் சவுரிராஜன், முருகன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.