/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் புதிய அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை அறிவிப்பு
/
செஞ்சியில் புதிய அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை அறிவிப்பு
செஞ்சியில் புதிய அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை அறிவிப்பு
செஞ்சியில் புதிய அரசு ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை அறிவிப்பு
ADDED : ஜூன் 14, 2025 01:15 AM
விழுப்புரம் : செஞ்சியில் புதிதாக துவக்கப்பட்ட அரசு ஐ.டி.ஐ., யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சித்துறை சார்பில் இந்தாண்டு செஞ்சியில் புதிதாக தொடங்கியுள்ள அரசு ஐ.டி.ஐ.,க்கு, 2025ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
செஞ்சி அரசு தொழிற் பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.,), விழுப்புரம் சாலையில், கே.எஸ்.காம்ப்ளக்சில் துவங்கப்பட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 2 ஆண்டு படிப்புகளான மோட்டார் வாகன மெக்கானிக் (எம்.எம்.வி), சென்டரல் ஏ.சி., மெக்கானிக், எலக்ட்ரானிக் டெக்னீஷியன் சிஸ்டம் சர்வீஸ் மற்றும் ஓராண்டு படிப்பான கம்ப்யூட்டர் எய்டட் எம்ராய்டரிங் அன் டிசைனிங் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்.
இதற்கு பயிற்சி கட்டணம் இல்லை. மாதம் ரூ.750 உதவித்தொகையும், இலவச பஸ் பயணம், இலவச சைக்கிள், பாட புத்தகம், சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவை அரசு சார்பில் வழங்கப்படும். தேர்வு கட்டணமும் இல்லை. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மார்பளவு புகைப்படம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன், உதவி இயக்குநர், விழுப்புரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், விழுப்புரம் என்ற முகவரியிலும், 99445 84989, 94861 51343, 04146-294989 தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.