/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கீழ்சித்தாமூரில் என்.எஸ்.எஸ்., முகாம்
/
கீழ்சித்தாமூரில் என்.எஸ்.எஸ்., முகாம்
ADDED : மார் 21, 2025 05:01 AM
மயிலம்: மயிலம் அடுத்த கீழ்சித்தாமூர் கிராமத்தில் பவ்டா கல்லுாரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துங்கியது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரியின் முதல்வர் சுதா கிறிஸ்டி ஜாய் தலைமை தாங்கினார். முகாமை கல்லுாரி செயலாளர் பிரபலா ஜெ ரோஸ் துவங்கி வைத்தார். கல்லுாரி நிறுவன தலைவர் ஜாஸ்லின் தம்பி சிறப்புரையாற்றினார். பவ்டா துணை இயக்குனர் அல்பினா ஜாஸ் வாழ்த்தி பேசினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சேகர் முகாமின் நோக்கங்கள் குறித்து பேசினார்.
கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர்கள் கீழ் சித்தாமூர் கிராமத்தில் உள்ள பள்ளி வளாகம், குளக்கரை, நாடக மேடை, ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி பகுதிகள் போன்றவற்றை துாய்மைப்படுத்த உள்ளனர்.
முகாமில் உதவி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.