ADDED : செப் 29, 2025 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார், காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் டி.எடையார் கிராமத்தில் துவங்கியது.
அதனையொட்டி, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் குமார் துவக்கி வைத்தனர்.
முகாமில் கிராமம் முழுதும் மரக்கன்று நடுதல், மண் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, போதைப்பொருள் தடுப்பு, முதலுதவி அளித்தல், 108 ஆம்புலன்ஸ் செயல் விளக்கம், சுற்றுப்புற தூய்மை, உழவாரப்பணி, உயர்கல்வி வழிகாட்டுதல், சிறுசேமிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றைப் பற்றி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாம் திட்ட அலுவலர் அருண், உதவி திட்ட அலுவலர் ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

