ADDED : மே 20, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த புலியனுாரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 64; விவசாயி. இவரது மனைவி விஜய சாமுண்டீஸ்வரி, 62; திருமணமாகி 40 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த ஒரு வாரத்திற்கு முன் விஜய சாமுண்டீஸ்வரி, கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அதன் பிறகும் அவருக்கு கண் பார்வை தெரியவில்லை. மேலும், அவரை கவனித்து கொள்ள யாரும் இல்லாததால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் அதிகாலை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, தீ வைத்து எரித்துக் கொண்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வெள்ளிமேடுபேட்டை போலீசார் விஜய சாமுண்டீஸ்வரியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.