/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பலி
/
டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பலி
ADDED : ஜன 27, 2024 12:56 AM

மரக்காணம் : விழுப்புரம் மாவட்டம்,மரக்காணம் பகுதியில் கடந்த ஒருமாத காலமாக மர்ம காய்ச்சல் ஏற்பட்டு, பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு, மரக்காணம் போலீஸ் காவலர் ஒருவர் காய்ச்சல் பாதிப்பில் இறந்தார். இதற்கிடையில் மரக்காணம் நாரவாக்கத்தை சேர்ந்த கர்ணன், 42; மேட்டு தெரு பழனி மகன் மணிகண்டன், 44; இருவருக்கும் சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு, மரக்காணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இரு தினங்களுக்கு முன்பு, இருவரும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் மணிகண்டன் டெங்கு காய்ச்சல் உறுதிபடுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மணிகண்டன் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். கர்ணன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

