/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணை மிரட்டிய நபருக்கு போலீஸ் வலை
/
பெண்ணை மிரட்டிய நபருக்கு போலீஸ் வலை
ADDED : ஜன 17, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட பெண்ணை மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். .
விழுப்புரம் சேவியர் காலனி பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின் மனைவி அமலராணி,31; இவரிடம், எதிர்வீட்டை சேர்ந்த மைக்கேல்,49; என்பவர், கடந்த 4 மாதங்களுக்கு முன், 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.
இந்த கடனை திருப்பி தரும்படி அமலராணி கடந்த 30ம் தேதி கேட்டார். அதற்கு மைக்கேல், அமலராணியை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில், மைக்கேல் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

