ADDED : ஜன 17, 2024 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி வளாகத்தில் நுண்கலை மற்றும் கலாச்சார மன்றத்தின் சார்பில், நடந்த விழாவிற்கு துறை தலைவர் கண்ணன் வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) நாராயணன் தலைமை தாங்கி, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து கல்லுாரி வளாகத்தில் புதுப்பானை வைத்து பொங்கலிட்டு, அனைவருக்கும் வழங்கினர்.
மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

