sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

படிக்கும் காலத்திலேயே போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் மாணவர்களுக்கு பொன்முடி எம்.எல்.ஏ., அறிவுரை

/

படிக்கும் காலத்திலேயே போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் மாணவர்களுக்கு பொன்முடி எம்.எல்.ஏ., அறிவுரை

படிக்கும் காலத்திலேயே போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் மாணவர்களுக்கு பொன்முடி எம்.எல்.ஏ., அறிவுரை

படிக்கும் காலத்திலேயே போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் மாணவர்களுக்கு பொன்முடி எம்.எல்.ஏ., அறிவுரை


ADDED : செப் 13, 2025 06:56 AM

Google News

ADDED : செப் 13, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என பொன்முடி எம்.எல்.ஏ., பேசினார்.

விழுப்புரம் கோவிந்தசாமி மணிமண்டபத்தில், அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபட்டு மறைந்த கோவிந்தசாமி மணிமண்டபத்தில், அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு தீவிர முயற்சி எடுத்ததுடன், சொந்த செலவில் புத்தகங்கள், சாதனங்களை வழங்கியுள்ள கோவிந்தசாமியின் மகன் டாக்டர் இளங்கோவன், அன்னியூர்சிவா எம்.எல்.ஏ., ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

தமிழகத்தில் தொகுதி வாரியாக நுாலகங்கள் திறக்கும் விதத்தில், விழுப்புரத்தில் ஒரு நுாலகத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்துள்ளார்.

போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். படிக்கும் காலத்திலேயே போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்.

நான் படித்த காலத்தில் எனது பேராசிரியர்தான் என்னை போட்டி தேர்வு எழுதச்சொன்னார். நானும் படித்து எழுதி தேர்ச்சி பெற்று கிளார்க் பணி கிடைத்தது. அதே நேரத்தில் எம்.ஏ., படிக்கவும் வாய்ப்பு வந்ததால், நான் எம்.ஏ., படிக்க சென்றுவிட்டேன். 1972ல் யு.பி.எஸ்.சி., தேர்வும் எழுதினேன்.

நாங்கள் படித்த காலங்களில், இப்படி தேர்வு பயிற்சி மையங்கள், நுாலக வசதிகள் இல்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே இருக்கும்.

இப்போது, விழுப்புரம் போன்ற பகுதியிலும் பயிற்சி மையம், நுாலகம் வாய்ப்பும் வந்துள்ளதை, இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பொன்முடி எம்.எல்.ஏ., பேசினார்.






      Dinamalar
      Follow us