நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வி.மருதுார் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் ஸ்ரீமதி, 26; எம்.எஸ்.சி., பி.எட்., முடித்துவிட்டு, விழுப்புரம் அருகே பூத்தமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், கடந்த 2 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
வழக்கம் போல், கடந்த 27ம் தேதி வேலைக்கு சென்ற அவர், மாலையில் கல்லுாரி முடிந்து மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, காணாமல்போன பேராசிரியரை தேடி வருகின்றனர்.

