/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் மருத்துவமனைகளில் மதுவிலக்கு போலீசார் சோதனை
/
தனியார் மருத்துவமனைகளில் மதுவிலக்கு போலீசார் சோதனை
தனியார் மருத்துவமனைகளில் மதுவிலக்கு போலீசார் சோதனை
தனியார் மருத்துவமனைகளில் மதுவிலக்கு போலீசார் சோதனை
ADDED : ஜூன் 15, 2025 11:50 PM

விழுப்புரம் : தனியார் மருத்துவமனைகள் மற்றும் பெயிண்ட் கடைகளில் உரிய அனுமதியின்றி எத்தனால், மெத்தனால் ஆகிய பயன்படுத்தப்படுகிறதா என மதுவிலக்கு மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் திடீர் ஆய்வு செய்தனர்.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., கந்தசாமி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சுஜதா, சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் விழுப்புரம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகள், பெயிண்ட் மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் டிரேடர்ஸ் கடைகளில் ஆய்வு செய்தனர்.
இக்குழுவினர், 7 தனியார் மருத்துவமனைகள், வேதியியல் பொருள் விற்பனை கடைகள், டிரேடர்ஸ் கடைகளில் சோதனை நடத்தினர்.
அங்கு ஆவணங்களின்றி எத்தனால், மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. கடை வியாபாரிகளிடம், மருத்துவமனைக்கு மட்டுமே வேதி பொருட்களை பயன்படுத்தப்பட வேண்டும்.
இவற்றின் தவறான பயன்பாடு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய தகவல்கள் தெரிந்தால் போலீசாரிடம் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.