/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குண்டும், குழியுமான சாலை பொதுமக்கள் அவதி
/
குண்டும், குழியுமான சாலை பொதுமக்கள் அவதி
ADDED : செப் 18, 2025 03:39 AM

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேல்மலையனுாரில் அமாவாசை தினத்தில் அங்காளம்மன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏராள மான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தை தரிசிக்க வருகின்றனர். மேலும், பி.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், வேளாண் துறை அலுவலகம் , காவல் நிலையம், வங்கிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு தினசரி கிராம மக்கள் வருகை தருகின்றனர்.
முக்கியமான இந்த பகுதியில், அவலுார்பேட்டை சாலையிலுள்ள இந்தியன் வங்கியிலிருந்து வளத்தி சாலையிலுள்ள வள்ளலார் மன்றம் வரையில், பல இடங் களிலும் குண்டும், குழிகளுமாய் சாலை பழுதடைந்து போக்கு வரத்திற்கு லாயக்கற்ற நிலையிலுள்ளது. சாலை பள்ளங்களில் குட்டை போல் மழைநீர் தேங்குகிறது. இங்கு சாலை அமைத்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
குண்டும், குழிகளும் நிறைந்த சாலையை புதிதாக அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.