sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரத்தில் குடியரசு தினவிழா கோலாகலம்! ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

/

விழுப்புரத்தில் குடியரசு தினவிழா கோலாகலம்! ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

விழுப்புரத்தில் குடியரசு தினவிழா கோலாகலம்! ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

விழுப்புரத்தில் குடியரசு தினவிழா கோலாகலம்! ரூ.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி


ADDED : ஜன 27, 2024 12:48 AM

Google News

ADDED : ஜன 27, 2024 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் பழனி தேசிய கொடி ஏற்றி வைத்தார். விழாவில் 41 பயனாளிகளுக்கு ரூ.35.05 லட்சம் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் நேற்று குடியரசு தின விழா நடந்தது. காலை 8.05 மணிக்கு கலெக்டர் பழனி தேசிய கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். குடியரசு தின விழா கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில், வெண் புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.

தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக் சிவாச் உடன் சென்று, காவல்துறை அணிவகுப்பினை பார்வையிட்டார். ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில் காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்காவல்படை, ஜெ.ஆர்.சி., என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள் படை யினரின் அணிவகுப்பு நடந்தது.

பிறகு, காலை 8.45 மணிக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செலுத்தி, குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்


முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டமும், தாட்கோ சார்பில் 2 பேருக்கு ரூ.18.89 லட்சத்திலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பேருக்கு ரூ.78 ஆயிரத்து 850 மதிப்பிலும், வேளாண்மைத்துறை சார்பில் 10 பேருக்கு ரூ.38 ஆயிரத்து 990 மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 3 பேருக்கு ரூ.11.33 லட்சம் மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலும், சமூக நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.13 ஆயிரத்து 104- மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.26 ஆயிரத்து 340 மதிப்பிலும் என மொத்தம் 41 பயானிகளுக்கு, ரூ.35 லட்சத்து 5 ஆயிரத்து 197 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய, மாவட்ட அளவிலான 281 அரசு துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு கலெக்டர் பழனி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 78 போலீசாருக்கு முதல்வரின் காவல் பதக்கமும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக, குடியரசு தின விழாவினை முன்னிட்டு, விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள காந்தி சிலைக்கு, கலெக்டர் பழனி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

குடியரசு தின விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷாமிட்டல், எஸ்.பி., தீபக்சிவாச், எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், சிவக்குமார், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணை சேர்மன் ஷீலாதேவி, டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், வேளாண் இணை இயக்குநர் கணேசன், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், ஆர்.டி.ஓ., காஜா சாகுல்ஹமீது உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள், பொது மக்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us