/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை சென்டர் மீடியன் தடுப்புகள் சேதம்
/
சாலை சென்டர் மீடியன் தடுப்புகள் சேதம்
ADDED : மே 27, 2025 12:44 AM

விழுப்புரம் : விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலை நடுவில் அமைக்கப்பட்ட பிளக்சிபல் ஸ்பிரிங் போஸ்ட்டுகள் சேதமடைந்துள்ளது.
விழுப்புரம் நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னை, கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, விழுப்புரம் - கிழக்கு பாண்டி ரோடு, தினமும் நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. இப்பகுதியில் நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரம் காந்தி சிலையில் இருந்து ரயில்வே மேம்பாலம் வரையிலும், அங்கிருந்து பானாம்பட்டு பாதை வரையிலும் சாலை நடுவில் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு பிளக்சிபல் ஸ்பிரிங் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டது.
இந்த போஸ்ட்டுகளை வாகன ஓட்டிகள் இடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால், இச்சாலையில் வாகனங்கள் எதிர் திசையில் முந்தி செல்வதால், மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.