/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஊர்வலம்
/
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஊர்வலம்
ADDED : ஜன 25, 2024 11:55 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்தினர்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் துவங்கி கலெக்டர் அலுவலகம் முன் முடிந்த ஊர்வலத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் பத்மாவதி தலைமை தாங்கினார். தலைவர் நாகராஜன் வரவேற்றார். பொருளாளர் ரத்தினம், மாநில துணைத் தலைவர் அபராஜிதன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலர் நாகராஜன், மாவட்ட தலைவர் மணிக்கண்ணன், செயலாளர் ஜெசிந்தாமேரி கோரிக்கை விளக்க உரையாற்றினர். மாவட்ட செயலாளர் மலர், குயின்எலிசபெத்மேரி வாழ்த்திப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு பென்ஷன் ரூ.6,750 வழங்க வேண்டும். காலமுறை ஊதிய வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

