/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளிக்கு எதிரில் கழிவுநீர் குட்டை
/
அரசு பள்ளிக்கு எதிரில் கழிவுநீர் குட்டை
ADDED : மே 29, 2025 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி எதிரில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனை பின்புறம், முருங்கப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது.
இந்த பள்ளிக்கு எதிரில் பல நாட்களாக கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையில் தேங்கியிருக்கும் சாக்கடை நீரை அகற்ற நகராட்சியிடம் பல முறை தெரிவித்தும், நடவடிக்கையும் எடுக்க வில்லை. சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.