/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு கூட்டம்
/
அரசு பள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜன 10, 2024 12:14 AM

செஞ்சி : சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் சிறுதானிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜோசப் எட்வின் முன்னிலை வகித்தார்.
சிறுதானியத்தின் பயன்கள், அவசியம், அதனால் கிடைக்கும் ஆரோக்கியம் குறித்து உதவி தலைமை ஆசிரியர் குப்பன் விளக்கி பேசினார்.
சிறுதானியத்தின் வகைகளை மாணவர்களுக்கு காட்சிப்படுத்தி விளக்கம் அளித்தனர்.
ஆசிரியர்கள் கிறிஸ்தவர் ராஜா, தாட்சாயணி. கல்யாணி, ஹரிணி, ஜெயந்தி மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

