ADDED : மார் 21, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் ; விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் எஸ்.பி., சரவணன் நேற்று இரவு 7:00 மணிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, முக்கிய வழக்கு தொடர்பாகன கோப்புகளை பார்வையிட்ட அவர், நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களை கேட்டறிந்து வழக்குளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார்.
மேலும், புகார் கொடுக்க வரும் மக்களை அன்போடு அணுகி, புகாரை பெற்று வழக்குப் பதிய வேண்டும். காவல் நிலைய வளாகத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க இரவுநேர ரோந்து பணிகளை தீவிரப் படுத்த வேண்டும் என போலீ சாருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, இன்ஸ்பெக்டர் கல்பனா உட்பட போலீசார் உடனிருந்தனர்.