ADDED : ஜன 17, 2024 07:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மாட்டுப் பொங்கலையொட்டி, மயிலம் ஒன்றியம், முப்புளி கிராமத்தில் பொங்கல் விளையாட்டு விழா நடந்தது.
முப்புளி ஊராட்சி மன்ற வளாகத்திலுள்ள மைதானத்தில் கிராம மக்கள் மற்றும் இளைஞர் மன்றம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடந்தன.
மாணவ, மாணவிகள், இளைஞர்களுக்கு கயிறு இழுத்தல், உரியடித்தல், கபடி, சிலம்பம், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

