/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அன்னியூர் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
/
அன்னியூர் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
அன்னியூர் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
அன்னியூர் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ADDED : மே 31, 2025 11:58 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அன்னியூர் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 3ம் தேதி துவங்குகிறது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் அடுத்த அன்னியூரில், இந்தாண்டு புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை துவங்குகிறது.
இதற்காக விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு வரும் 3ம் தேதி காலை 10:00 மணிக்கு கலந்தாய்வு துவங்குகிறது.
முதலில், சிறப்பு ஒதுக்கீட்டு குழுவைச் சேர்ந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
இந்த கலந்தாய்வில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், அந்தமான் நிக்கோபார் பகுதி தமிழ்மொழி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை உறுப்பினர்கள், பாதுகாப்புப்படை வீரர்கள் ஆகிய முன்னுரிமை பிரிவுகளில் விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களுடன், நேரில் பங்கேற்றலாம்.
தொடர்ந்து, முதல் பொது கலந்தாய்வு 5ம் தேதி காலை 10.00 மணிக்கு துவங்கி நடைபெறும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.