/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
/
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
ADDED : ஜூன் 07, 2025 01:28 AM
திண்டிவனம் : திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை நடந்தது.
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுரியில் 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கடந்த 2ம் தேதி துவங்கியது. 2 மற்றும் 3ம் தேதி சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான சேர்க்கை நடந்தது.
இதில் 14 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். 4ம் தேதி நடந்த கலந்தாய்வில், 45 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர்.
கலந்தாய்வின்போது, ஒவ்வொரு பாடப்பிரிவிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி முதல்வர் தங்கராஜன் புத்தகம் வழங்கினார். சேர்க்கை குழு உறுப்பினர்கள் நாராயணன், கார்குழலி, லலிதா, கமலக்கண்ணன், தண்டபாணி, ஸ்ரீநாத்குமார், பாலாஜி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.