/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை; விண்ணப்பங்கள் வரவேற்பு
/
ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை; விண்ணப்பங்கள் வரவேற்பு
ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை; விண்ணப்பங்கள் வரவேற்பு
ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை; விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 24, 2025 09:23 PM
விழுப்புரம் : அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,களில் 2025ம் ஆண்டிற்கான கலந்தாய்வு மூலம் நடக்கும் மாணவர்கள் சேர்க்கைக்கு 8ம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். ஜூன் 13ம் தேதி கடைசி நாள். விண்ணப்பித்தல் தொடர்பான உரிய அறிவுரைகள் வழங்கவும், விண்ணப்பங்கள் இலவசமாக பதிவு செய்யவும் திண்டிவனம், செஞ்சி, மரக்காணம் ஆகிய அரசு ஐ.டி.ஐ.,களில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், விபரங்களுக்கு திண்டிவனம் அரசு ஐ.டி.ஐ., முதல்வரை 9380114610 என்ற எண்ணிலும், செஞ்சி ஐ.டி.ஐ., உதவி இயக்குநர் மற்றும் விழுப்புரம் உதவியாளர் ஆகியோரை 9499055849, 9944584989, 8248173682 என்ற எண்ணிலும், மரக்காணம் ஐ.டி.ஐ.,யை 9443432739, 9095749899 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.