ADDED : ஜன 25, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் நர்சிங் கல்லுாரி மாணவி, காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மகள் தேன்மொழி, 19; இவர், விழுப்புரத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், கடந்த 24ம் தேதி கல்லுாரிக்குச் சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

