/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளியில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
/
அரசு பள்ளியில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
அரசு பள்ளியில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
அரசு பள்ளியில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 09, 2025 04:50 AM

விழுப்புரம்: காணை அருகே சென்னகுணம் அரசு உயர்நிலை பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி மற்றும் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் (பொறுப்பு) நாகராஜன் தலைமை தாங்கினார். ஆசிரியர் அந்தோணிராஜ் வரவேற்றார்.
ஆசிரியர்கள் தமிழ்செல்வன், பாரிவள்ளல், தண்டபானி, பொன்னுசாமி, ராமலிங்கம் ஆகியோர், பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகள் நதியா, சாதனா, சுதா ஆகியோருக்கு ரொக்க பரிசு வழங்கி, நுாறு சதவீதம் தேர்ச்சி தந்த மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.
ஆசிரியர்கள் சவரியம்மாள், சங்கீதா, கவிதா, சத்யா, செய்யதுநிஷா, முக்தா சீனிவாசன், கவிதா குமாரி உட்பட பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக, மாணவர்கள், 'நுாறு சதவீதம் தேர்ச்சி பெறுவோம், போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு'உறுதிமொழி எடுத்தனர்.