/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கருங்கல் சக்கை கடத்தல் டாரஸ் லாரி பறிமுதல்
/
கருங்கல் சக்கை கடத்தல் டாரஸ் லாரி பறிமுதல்
ADDED : மே 25, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுா :வானுார் அருகே கருங்கற்கள் சக்கை கடத்திய டாரஸ் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வானுார் அடுத்த திருவக்கரை பகுதியில் புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி இயக்குநர் ஜெயந்தி தலைமையில் அதிகாரிகள் எறையூர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தினர். லாரியை நிறுத்திய டிரைவர் தப்பியோடினார். லாரியை சோதனை செய்ததில் கருங்கற்கள் சக்கை கடத்தி வந்தது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து, வானுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.