/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி . மு . க ., பிரமுகர் இராம சரவணன் இல்ல திருணம வரவேற்பு விழா
/
தி . மு . க ., பிரமுகர் இராம சரவணன் இல்ல திருணம வரவேற்பு விழா
தி . மு . க ., பிரமுகர் இராம சரவணன் இல்ல திருணம வரவேற்பு விழா
தி . மு . க ., பிரமுகர் இராம சரவணன் இல்ல திருணம வரவேற்பு விழா
ADDED : செப் 03, 2025 08:53 AM
செஞ்சி; விழுப்புரம் மாவட்டம் அவலுார்பேட்டையை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் இராம சரவணன், மாவட்ட கவுன்சிலர் செல்வி இவர்களின் மகள் சாய்ஸ்ரீ, ஜீனத்பிரியன் திருமணம் கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்தது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அவலூர்பேட்டை ஸ்ரீசாய் மஹாலில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர்கள் மஸ்தான், எம்.எல்.ஏ., டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினர்.
செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், விஜயகுமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் சாந்தி சுப்பிரமணியன், நாராயணமூர்த்தி முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் திருப்போரூர் பாலாஜி, காஞ்சிபுரம் எழிலரசன், தென் சென்னை மாவட்ட செயலாளர் சிற்றரசு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் மாசிலாமணி, சேதுநாதன், சீதாபதி சொக்கலிங்கம், செந்தமிழ்செல்வன், புஷ்பராஜ். மாவட்ட ஊராட்சி சேர்மன் ஜெயச்சந்திரன், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட தலைவர் டாக்டர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், மாவட்ட துணை செயலாளர்கள் ரவிக்குமார், அருணகிரி, ஒன்றிய சேர்மன்கள் வல்லம் அமுதா ரவிக்குமார், மேல்மலையனுார் கண்மணி நெடுஞ்செழியன், ஒலக்கூர் சொக்கலிங்கம், மரக்காணம் தயாளன், மயிலம் யோகேஸ்வரி மணிமாறன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய துணை சேர்மன்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இராம சரவணன், செல்வி இராமசரவணன் ஆகியோர் நன்றி கூறினர்.