/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காஸ் கசிவால் தீ விபத்து மூன்று பேர் படுகாயம்
/
காஸ் கசிவால் தீ விபத்து மூன்று பேர் படுகாயம்
ADDED : செப் 28, 2025 04:02 AM
செஞ்சி:செஞ்சி அருகே காஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி உட்பட, மூவர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வடவானுாரை சேர்ந்தவர் குப்புசாமி, 75; இவரது மனைவி காசியம்மாள், 70; இருவரும் மாடி வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வாசனை வந்துள்ளது.
அதையடுத்து, நேற்று மாலை 5:00 மணியாவில் அதே பகுதியை சேர்ந்த பூபாலன், 53; என்பவரை உதவிக்கு அழைத்து காஸ் கசிவை சரிசெய்யும் படி, காசியம்மாள் கேட்டுள்ளார்.
காஸ் கசிவை சரி செய்த பூபாலன் அடுப்பை பற்ற வைத்ததில்அறை முழுதும் தீப்பிடித்தது. இதில், குப்புசாமி, காசியம்மாள், பூபாலன் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர்.

