ADDED : பிப் 29, 2024 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பாரதிய மஸ்துார் தொழிற் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை தலைவர் விமேஷ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் அருள்அரசன், துணை தலைவர் அமர்ராஜ், மண்டல செயலர் சண்முகம், கவுரவ தலைவர் சக்திவேல் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

