ADDED : அக் 20, 2025 09:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: வளத்தி அடுத்த பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நடும் பணியினை துவக்கி வைத்தார். விழுப்புரம் மண்டல அறநிலையத் துறை இணை ஆணையர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் சக்திவேல் வரவேற்றார்.
ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், ஊராட்சி தலைவர் கந்தவேல், கோவில் மேலாளர் சதீஷ், மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

