/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கீழ்கூடலூர் கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு; பொது மக்களிடம் பி.டி.ஓ., பேச்சுவார்த்தை

ADDED : ஜன 27, 2024 12:58 AM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே கீழ்கூடலுாரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பிரச்னை ஏற்பட்டதால், பி.டி.ஓ., தலையிட்டு சமாதமானம் செய்து வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒலக்கூர் ஒன்றியம், கீழ்கூடலுார் கிராம பஞ்சாயத் திற்கு உட்பட்ட ஈச்சேரி கிராமத்தில் நேற்று காலை குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம், பஞ்சாயத்து தலைவர் சேகர் தலைமையில் நடந்து.
இதில் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தண்ணீர் வரி வசூலிப்பது தொடர்பாக கேட்ட போது, குடிநீர் சரியாக வருவதில்லை எப்படி தண்ணீர் வரி தரமுடியும் என்று, பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பொது மக்கள் அதிகாரிகளிடம் கேள்வி கேட்டனர்.
இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் பஞ்சாயத்து தலைவர் உட்பட கிராம மக்கள், கூட்டத்தை புறக்கணிப்பு செய்ய போவதாக கூறினர்.
இதை தொடர்ந்து நேற்று பிற்பகல் 12.20 மணிக்கு, ஒலக்கூர் பி.டி.ஓ., தேவதாஸ் நேரில் வந்து பஞ்சாயத்து தலைவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் பழுதான குடிநீர் டேங்குகளை சீர் செய்து தருவது, ஏரியிலுள்ள மதகை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, கிராம மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கப்படும் என்று பி.டி.ஓ., கூறினர். இதன் பிறகு தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடந்தது.